சைக்கிளில் பிரச்சாரம் செய்து எம்பியான பிரதாப் சாரங்கி தற்போது டெல்லிக்கு தனது ஒற்றை சைக்கிளில் ஒரே ஒரு பையுடன் மக்களின் சேவைக்காக பயணம் மேற்கொண்டு உள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் பாலசோர் என்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தான் எம்பி பிரதாப் சாரங்கி.இவர் குடிசை வீட்டில் வசித்து தனது வாழ்நாளை கழித்தவர். திருமணமாகாமல் தன் தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்த இவர் மக்களுக்காக உதவி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.ஏழை எளிய மக்களுக்கு சேவை ஆற்றி மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தவர். இவருடைய எளிமையான வாழ்க்கை முறை மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை, சைக்கிளிலேயே சென்று பிரச்சாரம் மேற்கொள்வது, இவை அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் சன்னியாசியாக விரும்பி ராமகிருஷ்ண மடத்தையும் நாடியுள்ளார். ஆனால், ராமகிருஷ்ண மடமும் சாரங்கியிடம் மக்கள் சேவையில் ஈடுபடுவதை ஊக்குவித்து உள்ளனர். 

இவர் பல்வேறு பகுதிகளில், மாணவ மாணவிகளுக்கு ஏராளமான பள்ளிகளைத் திறந்து வைத்து நன்மை செய்து உள்ளார். அது மட்டுமல்லாமல் பாலசோர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கோடீஸ்வர வேட்பாளர்களை எல்லாம் தோற்கடித்து வென்று உள்ளார் என்றால், மக்கள் மத்தியில் இவருக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருந்திருக்கும் என்பதை உணர முடியும்.
 
இந்த நிலையில் தான்  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி  பெற்று  தற்போது தனக்கு சொந்தமான சிங்கிள் சைக்கிள்.. சிங்கிள் பையுடன் மக்களின் தேவைகளை எடுத்துரைக்க டெல்லி சென்று உள்ளார்.