இன்னும் 7 மாதம் மட்டுமே..! இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிய "லாக்"..! உடனே செய்ய வேண்டியது என்ன தெரியுமா..? 

வரும் அக்டோபர் மாதம் முதல் இருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகளை கொண்டு வர மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அதன்படி மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதி படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்க கூடியவர்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையிலும் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் குறையும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அதில் முகப்பு விளக்கு, நம்பர் பலகை கண்டிப்பாக இருக்க வேண்டும். வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது மிகவும் கட்டாயம். பின் இருக்கையில் அவர்கள் கால்வைக்க கண்டிப்பாக புட் ரெஸ்ட் வைக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் பின் சக்கரத்தை பாதியாக மறைக்கும் அளவுக்கு மட் கார்டு பொருத்தி இருக்க வேண்டும். இதெல்லாம் தவிர்த்து பின் பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களின் பாதுகாப்பிற்காக இருக்கையை ஒட்டிய கைப்பிடி அமைக்க வேண்டும்.

இவ்வாறு இருசக்கர வாகனங்கள் பராமரிக்கவில்லை என்றால் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் அபராதம் என்ன என்பது குறித்தும், என்ன நடவடிக்கை எடுப்பது குறித்தும் முழு விவரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.