சர்வதேச அன்னையர் தினம் மே 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 365 நாளும் உங்களை பற்றியே நினைக்கும் உங்களின் அம்மாவை இந்த நாளில் சந்தோஷப்படுத்தலாம். மிகவுன் விலையுயர்ந்த கிஃப்ட் தான் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. 

உங்கள் அம்மாவுக்கென்று சிறிய ஆசை எதாவது இருக்கலாம் அதை கூட நிறைவேற்றலாம். அவருக்கு பிடித்த உணவை செய்து கொடுக்கலாம். நீங்கள் வெளியூரில் வேலை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் வாட்ஸ் அப்பில் வாழ்த்து கூறி உங்கள் அம்மாவை மகிழ்விக்கலாம்.

உலகில் உள்ள ஒவ்வொரு அன்னையருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை கொண்டாடாமல் அன்றன்றைக்கும் கொண்டாட வேண்டும்! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

இருப்பவன் தொலைப்பதும் இழந்தவன் தேடுவதும் தாயின் அன்பையே

இந்த அன்னையர் தினம் உலகுக்கு நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, நீங்கள்தான் என் முழு உலகமும்! அன்பான அன்னையருக்கு வாழ்த்துக்கள்

உங்களின் அம்மா தான் உங்களின் முதல் நண்பன், நெருங்கிய நண்பன், எப்போதும் கூடவே இருக்கக்கூடிய நண்பன்.

உழைப்பு சுரண்டலையும், தன் தியாகத்தையும் குடும்பத்திற்காக எளிமையாக கடந்து செல்பவள் தாய்! அன்னையர் தின வாழ்த்துக்கள்!

கனவு, ஆசை, இலட்சியம் ஆகியவற்றை கலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

கனவு, ஆசை, இலட்சியம் ஆகியவற்றை கலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில் நம்மை தாங்கியவள் அன்னை! அன்னையர் தின வாழ்த்துக்கள்!

அன்பின் முழு வடிவமே அன்னை! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

பிடிவாதம் , வெறுப்பு, கோவம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் அன்பு மட்டுமே செலுத்தும் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

மூச்சடக்கி ஈன்ற என் அன்னையை என் மூச்சுள்ளவரை காப்பேன் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்