Asianet News TamilAsianet News Tamil

மொபைல் போனில் பேசிக்கொண்டே குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த தாய்.. பின்னர் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க..

ஒரு குழந்தையின் தாய் எந்தளவு செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறார் என்பதை காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Mother Puts toddler in fridge while using mobile phone what happened next watch viral video Rya
Author
First Published Apr 1, 2024, 12:59 PM IST

இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் செல்போன் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக சிலர் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அந்த வகையில் ஒரு குழந்தையின் தாய் எந்தளவு செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறார் என்பதை காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட்போன்களில் அதிகமாக மூழ்கியிருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

வீடியோவில், அந்தப் பெண் போனில் பேசிக் கொண்டு இருப்பதையும், அவர் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. பின்னர் அவர் போன் பேசிக் கொண்டே காய்கறிகளை நறுக்கிறார். பின்னர் , அந்த பெண் கவனக்குறைவாக காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு பதிலாக தனது குழந்தையை அதில் வைத்து விடுகிறார். அதன்பிறகும் தான் என்ன செய்தோம் என்று தெரியாமலே தொடர்ந்து போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.

 

பின்னர் வீட்டுக்கு வரும் அப்பெண்ணின் குழந்தை எங்கே என்று கேட்கும் போது குழந்தையை காணவில்லை என்றே அந்த பெண்ணுக்கு தெரிகிறது. இருவரும் தேடிய பிறகு குழந்தை அழும் சத்தம் ஃப்ரிட்ஜில் இருந்து வருகிறது. அதன்பிறகு அந்த குழந்தையை அவரின் தந்தை ஃப்ரிட்ஜில் இருந்து மீட்பதை பார்க்க முடிகிறது.

சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது, இந்த வீடியோவை பார்த்த பல பயனர்கள் தாயின் நடத்தை குறித்து அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். "கொடூரமான போதை" என்ற தலைப்புடன் வீடியோ வெளியிடப்பட்டது, பலர் அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குழந்தை காணாமல் போனால் மக்கள் வெளியே தேடுவார்கள்.. அதே இடத்தில் அல்ல” என்று பதிவிட்டு வருகிறார். மற்றொரு பயனர், தயவுசெய்து உங்கள் குழந்தைகளை ஸ்மார்ட்போன்களில் கவனித்துக் கொள்ளுங்கள்" என்றார். இன்னொரு பயனர் நகைச்சுவையாக, "'அசல் திரைக்கதை' பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர்.." என்று குறிப்பிட்டுள்ளார்..

Follow Us:
Download App:
  • android
  • ios