குழந்தையை பெற்றெடுப்பதற்காக பிரசவத்தில் உச்சபட்ச வலியை பொறுத்துக்கொள்வள் தாய். அப்படி பெற்ற குழந்தையை தனது ரத்தத்தையை பாலாக்கி தருபவள் அவள். இங்கு கொட்டும் ரத்தத்தின் இடையே வலியையும் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட சொட்ட தாய் குரங்கு குட்டிக்கு பால் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அன்பால் பெருக்கெடுப்பது காதல் மட்டுமல்ல, தாய்ப்பாலும் தான். இந்த உலகத்தில் கலப்படமில்லாத ஓர் உணவு தாய்ப்பால் என்பார்கள். ஆனால், தாய் கொடுப்பதால் தனது அழகு போய்விடுமோ என்ற அச்சத்தில் பெரும்பாலான தாய்மார்கள் தாய்பால் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம், நர்சாபூரிலிருந்து ஐதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் கும்முடிதல கிராமம் அருகே காடுகள் நிறைந்த பகுதி உள்ளது. இதனால் காட்டு பகுதியிலிருந்து வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு வருவது வழக்கம். அதேபோல் உணவை தேடி குரங்கு ஒன்று சாலையை கடந்தது.

அப்போது நரசாப்பூர் நோக்கி சென்ற வாகனம் குரங்கு மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த குரங்கிற்கு ரத்தம் வழிந்தது. ஆனாலும், குழந்தையின் பசியைப் போக்க ரத்த காயங்களையும் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட சொட்ட தனது குட்டி குரங்குக்கு பால் கொடுத்தது. இந்த காட்சி அவ்வழியே வாகனங்களில் செல்பவர்களை நெகிழ செய்ததுடன் கண் கலங்க செய்தது. இந்த புகைப்படம் பலராறும் பகிரப்பட்டு வருகிறது.