காலை உணவு ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு முக்கியம் காலை உணவை தவிர்ப்பது அன்றைய செயல்பாடுகளை பாதிக்கும். காலை உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

க்ரீக் தயிர்

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை இயற்கை முறையில் அதிகரிக்க உதவும். இதில் உள்ள கால்சியம் மற்றும் அமிலங்கள் குடல் ஆரோக்கியம், பசியை கட்டுப்படுத்துவுது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஓட்ஸ்

இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் பசியைத் தடுக்கிறது. இதில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.  தயிர் அல்லது சிறிதளவு புரோட்டின் பவுடருடன் சேர்த்து சாப்பிடலாம்.

முட்டை

சிறப்பான வளர்ச்சிதை மாற்றத்திற்கு முட்டை அவசியம்

இதில் சரியான அளவில் புரோட்டின்கள், ஒமேகா 3 அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலம் உள்ளன. காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாடனும், இன்சுலின் அளவையும் சீராகவும் வைத்திருக்க உதவுகிறது.

காபி

அதிகளவு காபி குடிப்பது  சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட அளவிலான காபி குடிப்பது நன்மைகளை அளிக்கும். காபி கலோரிகளை எரிப்பதுடன் ஆரோக்கியத்தின் அளவை அதிகரிக்கும்.

பாலாடைக்கட்டி

புரோட்டின்களின் சுரங்கமான பாலாடைக்கட்டி பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். பாலடைக்கட்டியுடன் சில தானியங்களை சேர்த்து சாப்பிடுவது மிகச்சிறந்த காலை உணவு.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி சர்க்கரை அளவை குறைக்கவும், அசாதாரண வளர்ச்சிதை மாற்றத்தை சரிசெய்யவும் பயன்படுகிறது. இதை ஓட்ஸ் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.

பெர்ரீஸ்

ப்ளூபெர்ரீ, ப்ளாக்பெர்ரீ, ராஸ்பெர்ரீ போன்ற பழங்களை காலையில் சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். ஓட்ஸ் அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச், கார்போஹைட்ரேட்டுகள் பசி ஏற்படாமல் நீண்ட நேரம் கட்டுப்படுத்தும். பொட்டாசியம் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை செல்களுக்கு கடத்த உதவுகிறது.