சாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவீத நீர் சத்து உள்ளது. மனிதன் உயிர் வாழ நீர் அவசியம், வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம், மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் போன்ற வற்றிற்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பதும் மிக அவசியம்.

ஆனால் டயட்டில் இருக்கிறேன்.. என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவதும் உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு. தண்ணீர் குடித்து எடை குறைக்கலாம் என்று நினைத்து அதிகமான தண்ணீர் அருந்துவது தவறு. 

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம், என்பதை அவரவரின் எடை மற்றும் செய்யும் வேலையைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும். உதாரணத்திற்கு என்பது கிலோ எடையுள்ள ஒருவர் 200 கிலோ எடை உடையவர் அருந்தும் நீரின் அளவை எடுத்துக் கொள்ளக்கூடாது.

என்பது கிலோ எடை இருந்தால், சுமார் ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தலாம்.  நீங்கள் செய்யும் வேலையை பொருத்தது குடிக்கும் நீரின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏசி அறையில் கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் குறைந்த அளவே தண்ணீர் போதும். கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் அரை லிட்டர் தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லது.

உங்களால் அதை பின்பற்ற முடியவில்லை என்றால் இதோ இந்த சின்ன விஷயத்தை கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும். காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள், உணவு வேளைக்கு அரை மணி நேரத்திற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள், உணவு உண்டு முடித்தப்பின் அரை மணி நேரம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். மேலும் உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள் வெளியில் செல்லும் போது உடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள் நீர்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து அதிகப்படியான நீர் கிடைப்பதால் நேரடியாக அருந்தும் நீரை அளவை குறைத்துக்கொள்ளலாம் நீ நம் உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும் அதற்கு அதிகமாக அருந்தினால் வேறு பல பிரச்சினைகள் வந்து விடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.