Monkeypox Symptoms: குரங்கு அம்மை காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர் போன்றவை, நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். மேலும், நோயின் சிகிச்சை என்ன? என்பதை பற்றி முழுவதும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குரங்கு அம்மை காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர் போன்றவை, நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். மேலும், நோயின் சிகிச்சை என்ன? என்பதை பற்றி முழுவதும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குரங்கு அம்மை காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் என்ன?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் குறைந்தது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை இருக்கும். பொதுவாக நோய் பாதிப்புக்குளாகி 7 முதல் 14 நாள்களுக்குள் அறிகுறிகள் தென்படும். ஆனால் 5-21 நாட்கள் வரையும் இருக்கலாம். 

குரங்கு அம்மை காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் தொடங்குகிறது. தோல் வெடிப்புகள் பொதுவாக காய்ச்சலுக்கு இரண்டு நாட்களுக்குள் தோன்றும். தொற்றால் பாதிக்கப்பட்ட 95 சதவீத பேரில் சொறி முகத்தில் அதிகமாகக் குவிந்திருப்பது தெரியும். 

75 சதவீத நோயாளிகளில் இது உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அதிகமாக காணப்படுகிறது. 70 சதவீத நோயாளிகளில் வாய்வழி சளி சவ்வை பாதிக்கிறது. கான்ஜுன்டிவா, கண்ணின் கார்னியா மற்றும் பிறப்புறுப்பு பகுதியும் பாதிக்கப்படலாம்.

தோல் வெடிப்பு நிலை 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். இந்த காலத்தில், புண்கள் கடினமாகி வலி ஏற்படும். இந்த புண்களில் முதலில் ஒரு தெளிவான திரவமும் பின்னர் சீழும் நிரப்பப்படும். பின்னர் ஸ்கேப்கள் அல்லது மேலோடு உருவாகின்றன.

மேலும், கண் வலி, பார்வை திறன் குறைதல் , மூச்சுத் திணறல், சிறுநீரின் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் உள்ள நோயாளிகளை தனிமைப்படுத்திக் கவனிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

குரங்கு அம்மையின் சிகிச்சை முறைகள்..?

குரங்கு அம்மை பாதிப்புக்கு முறையான சிகிச்சை முறை இதுவரை இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சையளிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. பாதிப்புக்குள்ளான நபர்களை, உடனடியாக தனிமைப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தோல் வெடிப்புகளை எளிய கிருமி நாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் விரிவான காயங்கள் ஏற்பட்டால் லேசான ஆடைகளால் அவை மூடப்பட்டிருக்க வேண்டும். 

சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, தோல் வெடிப்புகளை கிருமி நாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும். வாய் புண்களை வெதுவெதுப்பான உப்பு நீர் வாய் கொப்பளிப்பதன் மூலம் நிர்வகிக்க வேண்டும். மேலும், இதை முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலம் திறமையாக கையாளலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க.....Alcohol Mental Health: மது பிரியர்களே எச்சரிக்கை...!மன நலம் பாதிக்கும் அபாயம்? புதிய ஆய்வில் வெளிவந்த உண்மை...