Alcohol Mental Health: மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் காரணமாக மன நலம் பாதிக்கப்படுவதாக நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் காரணமாக மன நலம் பாதிக்கப்படுவதாக நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக ஆல்கஹால் நம் உடலுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படுத்துகிறது. பொதுவாக ஆல்கஹால், ஒருவரின் கல்லீரலை கடுமையாக சேதப்படுத்துவதுடன், பல உடல்நல கோளாறுகள் ஏற்பட முக்கியாக காரணமாக இருக்கிறது. 

மது அருந்துவதால் உடலில் ஏற்படும் முக்கிய 5 பாதிப்புகள் பற்றி பார்ப்போம்.

1. குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது கடும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. 

2. மது வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி (Gastritis) ஏற்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது. வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது. 

3. மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.

4. மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் (Cirrhosis) ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

5 . மேலும், கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம் (Korsakoff's Syndrome) என்ற மூளை பாதிப்பு நோய் ஏற்பட வழி வகுக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது ஆல்கஹால் விஷயத்திற்கும் பொருந்தும் என்பதை உணர்த்து செயல்பட வேண்டும்.

மது அருந்துதல் காரணமாக மன நலம் பாதிப்பு:

சமீபத்திய நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் காரணமாக மன நலம் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, மது அருந்துவதால் மூளையில் அமிக்தாலா மற்றும் ஹிப்போகேம்பஸ் பகுதி சுருங்குகிறதாம். மொத்தத்தில் தீவிரமான மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இரண்டும் சேர்ந்தால் மூளையின் செயல்திறன் குறைவதுடன் மனநலம் பாதிப்பு உறுதி என்கின்றனர் ஆய்வாளர்கள். 

எனவே, மதுவுக்கு அடிமை என்பது உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல. மனரீதியான, சமூக ரீதியான பிரச்சனையாகும். ஆகவே இவர்களை குணமாக்க உளவியல் ரீதியாகவும் அணுக வேண்டியது அவசியம். அந்த வகையில், உடலில் மதுவினால் உண்டான நலக்கேடுகளை சீர்படுத்துவதோடு மனரீதியான தூண்டுதல்களையும் சரி செய்ய ஹோமியோபதி மருந்துகள் முதன்மையான ஒன்றாக உள்ளது.

மேலும் படிக்க....ஆண்களே, பெண்களே இனிமேல் இதை செய்யாதீங்க...அதிர்ச்சியளிக்கும் புதிய ஆய்வு...எச்சரிக்கும் மருத்துவ வல்லுநர்கள்..