கட்டுக்கட்டாக பறந்து வந்த 2000 ரூபாய் நோட்டுக்கள்.! ரோட்டில் சென்றவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! 

கொல்கத்தாவில் நேற்று மாலை ஹாக் என்ற வணிக நிறுவனத்தின் கட்டிடத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின்போது கட்டுக்கட்டாக பணத்தை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

கொல்கத்தாவில் இயங்கிவரும் ஹாக் என்ற வணிக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த கட்டிடத்தின் அடுக்கடுக்கான தளங்களிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் வெளியே வீசப்பட்டு உள்ளது.

500 ரூபாய், 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் என மேலிருந்து தொடர்ந்து பறந்து வந்து தரையில் விழுந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் ஓடோடி சென்று பணத்தை எடுத்து சென்றனர். இன்னும் ஒரு சிலர் பணம் விழுவதை பார்த்து ஆச்சரியமாக வீடியோ எடுக்க தொடங்கி, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்

 

வருமான வரி சோதனையின்போது ஊழியர்கள் பயந்து, இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.