அமெரிக்காவில் சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்த பணம் கட்டு கட்டாக கீழே கொட்டி  உள்ளது. அதனை பார்த்த மக்கள் ஓடோடி சென்று பணத்தை எடுத்து சென்றனர். இந்த காட்சி காண்போரை ஆச்சர்யம் அடைய வைத்து உள்ளது. 

அமெரிக்காவின் ஜார்ஜியாவில், Ashford Dunwoody சாலையில், பணம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரியின் கதவு திடீரென திறந்ததால், அதிலிருந்து பணம் கொட்ட தொடங்கியது. கணக்கீட்டின் படி, சுமார் 1,75 000 டாலர்கள் கீழே விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பணம் விழுவதை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு,பணத்தை எடுத்து சென்றனர். ஆனால், அந்நாட்டு காவல் துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. பணத்தின் சீரியல் நம்பர் உள்ளது... நீங்கள் அந்த பணத்தை எங்கு கொடுத்தாலும் கண்டுபிடித்து விட முடியும். எனவே தாங்களாகவே வந்து அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் என தெரிவித்து உள்ளது.