நாளுக்கு நாள் மோடிக்கு பெருகும் ஆதரவு..! உலக அளவில் இவர் தான் அடுத்த லெவல்..! 

ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

2009 ஆம்  ஆண்டு தனக்கென தனி ட்விட்டர் பக்கம் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி அப்போது குஜராத் முதல்வராக இருந்தார். பின்னர் மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்த பின் பிரதமராக பதவியேற்ற மோடிக்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முடிய 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்ந்தனர். 

இந்த நிலையில் தற்போது 5 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை 10 கோடிக்கும் மேல் பின்தொடர்வதால் அவர் முதல் இடத்திலும், இதற்கு அடுத்தபடியாக டொனால்டு ட்ரம்ப்பை 6 கோடிக்கும் அதிகமாக பின்தொடர்வதால் 2 ஆவது இடத்திலும்,5 கோடிக்கும் அதிகமான நபர்கள் பின்தொடரும் பெரும் தலைவராக 3 ஆவது இடத்தில் பிரதமர் மோடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேப்போன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 கோடியே 50 லட்சம் பேர் மோடியை பின்தொடர்வதால், அதிக அநபர்கள் பின்தொடரும் தலைவர்கள் பட்டியலில் மோடி முதன்மையாக  உள்ளார்.

மோடியின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இதுவரை அதிக லைக்குகளை  வாங்கிய போட்டோ என்றால் ஒரு குழந்தையுடன் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான். இதைப்போன்று மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தை 4 கோடியே 48 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.