உற்று பார்க்கும் மோடி..!  ஸ்டைலில் ட்ரம்பை ஓரங்கட்டிய அந்த தருணம்..! 

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக புவி வட்டப்பாதையை சென்றடைந்தது. இந்த காட்சியை அலுவலகத்தில் இருந்தபடியே,பிரதமர் மோடி மிக ஸ்டைலாக சந்திராயன் விண்கலம் பாய்வதை கண்டு மகிழ்ச்சியில் கை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.  

இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அங்கு மக்கள் வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை, உருவாக்கி வெற்றிகரமாக விண்னில் ஏவப்பட்டது. 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, "நாம் புதிய மயில்கல்லை எட்டியுள்ளோம். இன்றைய விஞ்ஞானம் இளைஞர்களை ஊக்குவிப்பதாக அமைந்து உள்ளது..'சந்திரயான் - 2' விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமை படும்  நேரம் இது .. இந்த அரிய சாதனைக்காக அரும்பாடு பட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள் என தெரிவித்து உள்ளார் பிரதமர் மோடி 

ஒரு நிமிடம் கூட வீணாகாமல் நாட்டுக்காக உழைத்து வரும் பிரதமர், நாட்டின் ஒவ்வொரு விஷயத்தையும் உற்று நோக்கி வருகிறார்.அது போன்ற சில நிகழ்வுகளில்,இன்று  டிவி பார்த்த  படியே ராக்கெட் ஏவப்படத்தை  ஸ்டாலாக பார்க்கிறார் மோடி. உலகில் மிக பெரிய தலைவர்களாக கருதப்படும் ட்ரம்ப்பை மிஞ்சிய ஒரு கூர்மையான பார்வை மோடியிடம் காண முடிகிறது என பரவலான கருத்தை பார்க்க முடிகிறது.