உலகத் தலைவர்களில் மிகவும் சக்தி வாய்ந்த, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி.மோடி என்றால் அதிரடியாக செயல்படக்கூடியவர் என்ற கருத்துதான் பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படும். 

கொஞ்சி பேசும் மோடி..! பச்சிளம் குழந்தைக்கே டஃப் கொடுக்கும் கியூட்..!

உலகத் தலைவர்களில் மிகவும் சக்தி வாய்ந்த, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி.மோடி என்றால் அதிரடியாக செயல்படக்கூடியவர் என்ற கருத்துதான் பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படும். 

"நாட்டிற்காக உழைப்பு... ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி" என தொடர்ந்து ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் திட்டம் போட்டு திறம்பட செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய ஒரு பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மோடியின் இன்றைய இன்ஸ்டாகிராம் பதிவு இதுவரை பல லட்சங்களில் லவ் சிம்பல்ஸ் அன்பாக பெற்று உள்ளது. அப்படி இந்த பதிவு அனைவரின் மனதையும் ஏன் கவர்ந்து உள்ளது தெரியுமா..?

பிரதமர் நரேந்திர மோடி தன் கையில் பச்சிளம் குழந்தையை வைத்துக் கொண்டு, அழகாக கொஞ்சும் காட்சிதான் அது.... அந்த குழந்தையோடு தன்னை குழந்தையாகவே பாவித்து சிரித்து விளையாடும் அந்த புகைப்படத்தை ஆசையாக சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார் மோடி.

View post on Instagram

அதில், இன்று நாடாளுமன்றத்திற்கு மிக முக்கியமான நபர் என்னை சந்திக்க வந்திருந்தார்" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் மோடி. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.