பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் ஐந்து வார தொடராக வருகிறது. அதில் பிரதமர் மோடி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பதிவின் மூலம், மோடி கடந்து வந்த பல விஷயங்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

இந்த வார பதிவில் பிரதமர் தனது தாயுடனான அன்பை பற்றி நெகிழ்ச்சியாக பேசி உள்ளார். அதாவது தான் குஜராத் முதல்வராக  பொறுப்பேற்ற பிறகு, "நீ என்ன வேலை செய்கிறாய்,என்ன வேலை செய்ய போகிறாய் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீ யாரிடமும் லஞ்சம் மட்டும் வாங்க கூடாது என தன்னிடம் தன் தாய் சத்தியம் வாங்கிக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த ஒரு வாரத்தை தனக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்து உள்ளார். இதற்கு சில காரணத்தையும் முன் வைத்துள்ளார் மோடி. தன் தாய் அவருடைய வாழ்நாள் முழுவதுமே உடுத்த ஒரு நல்ல உடை கூட இல்லாமல் அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து விட்டார். அப்படி ஒரு கஷ்டத்துக்கு நடுவே, ஒரு நல்ல நாளில் தான் இப்படியொரு சத்தியத்தை என்னிடம் வாங்கினார் என மனமுருகி பேசி உள்ளார் மோடி 

தன் மகன் சிறந்த மனிதராக நேர்மையானவராக இருந்து நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரின் விருப்பம். நான் ஒரு சாதாரண வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்றால் கூட, ஊருக்கே இனிப்பு வழங்கி கொண்டாடுவார் என் தாய்...இது தான் அவருக்கு பெரிய விஷயமும் கூட மாறாக முதல்வர் பிரதமர் எதுவாக இருந்தாலும் அவருக்கு அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது என தன் தாயுடனான அன்பான மகிழ்ச்சியான சில நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார் மோடி.