உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர்களை வரிசைப்படுத்தும் ஒரு ஆய்வினை பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டதில் அதிலும் கூட முதல் இடத்தை தட்டி சென்றுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

facebook இல் அதிக லைக்ஸ் வாங்கி மக்களின் ஆதரவை பெற்ற பிரபல தலைவர்கள் யார் என்ற முறையில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொண்டது பேஸ்புக் நிறுவனம். அதில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவருடைய தனிப்பட்ட பக்கத்திற்கு மட்டும் 4 கோடியே 35 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்றால் பாருங்களேன். அது மட்டுமல்லாமல் இந்திய பிரதமருக்கு என்ற பக்கத்துக்கு ஒரு கோடியே 37 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட இரண்டாவது இடம்தான். அவருடைய தனிப்பட்ட பக்கத்திற்கு வெறும் 2 கோடியே 30 லட்சம் லைக்ஸ் மட்டுமே கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜோர்டான் ராணி ரனியா, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ ஆகியோர் 3 மற்றும் 4 ஆவது இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.