சொல்லி அடிக்கும் மோடி..! ஆட்சியேற்று அடுத்த 100 நாளில் இப்படி ஒரு திட்டம்...!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 15, Apr 2019, 3:42 PM IST
modi decided to do next great plan after election result
Highlights

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்களில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய முக்கிய திட்டங்களை தயாரிக்குமாறு நிதி ஆயோக் அறிவியல் ஆலோசகருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

சொல்லி அடிக்கும் மோடி..! 

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்களில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய முக்கிய திட்டங்களை தயாரிக்குமாறு நிதி ஆயோக் அறிவியல் ஆலோசகருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது. மற்ற ஆறு கட்ட தேர்தல் முடிவடைவதற்கு முன்னதாகவே தேர்தலில் வெற்றி பெற்ற பின் மீண்டும் ஆட்சியைப் பிடித்து நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான 100 திட்டங்களை தயாரிக்குமாறு பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மே மாதம் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. பின்னர் தான் யார் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும். இருந்த போதிலும் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையுடன் அடுத்தகட்ட செயல் திட்டத்தில் இறங்கியுள்ளது மத்தியில் ஆளும் பாஜக.

loader