தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எதிர்கட்சியினரின் குடும்ப அரசியலுக்கும் ஊழலுக்கும் முடிவு கட்டுவேன் என்று பிரதமர் மோடி காட்ட சாட்டமாக பேசி உள்ளார்.

பீஹார் மாநிலம் பகல்பூர் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஏழைகளின் பெயர்களை பயன்படுத்தி எதிர்கட்சியினர் செய்யும் கொள்ளை, ஊழல், மதத்தின் பெயரால் அவர்கள் நடத்தும் அரசியல் சூழல் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருவேன் என குறிப்பிட்டு உள்ளார் பிரதமர் மோடி.

அதே சமயத்தில் நக்சல்களையும், தீவிரவாதிகளை ஒடுக்க முழு சுதந்திரத்தை படைவீரர்களுக்கு பாஜக தலைமையிலான அரசு கொடுத்துள்ளது. ராணுவ வீரர்களுக்கு சிறப்பு அந்தஸ்தையும் வழங்கியுள்ளது. ஆனால் ஊழல் கூட்டணியை கொண்டுள்ள எதிர்க்கட்சிகளோ ராணுவ வீரர்களுக்கு உண்டான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய நினைக்கிறது என குற்றம்சாட்டி பேசினார் மோடி.

இந்த பிரச்சார மேடையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் செயல் படுத்திய பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை பற்றி எடுத்துரைத்து, மீண்டும் தான் பிரதமரானால் எதிர்கட்சியினரின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுவேன் என்ற பிரதமரின் சபத பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.