வாட்டர் ஹீட்டர் வாங்க போறீங்களா? அப்ப இந்த '1' தவறை பண்ணிடாதீங்க!!
Water Heater Maintenance Tips : வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது குளிர்காலம் தொடங்கி விட்டது. காலையில் குளிக்கும் போது தண்ணீரை தொட்டுப் பார்த்தால் பனிக்கட்டி போல ஜில்லென்று இருக்கும். இதனால் பலரும் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஏனென்றால் வெந்நீர் போடுவதற்கு கேஸ் அடுப்பை பயன்படுத்துவது அதிகமான அளவில் எரிபொருளை எடுத்துக் கொள்ளும். வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெந்நீர் போடுவதால் கேஸ் விரைவில் தீரலாம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக தான் பலர் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
இப்போது சந்தைக்கு விற்பனைக்கு வரும் வாட்டர் ஹீட்டர்கள் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் கொண்டுள்ளது. நாம் தண்ணீர் சூடானதும் அதை அணைக்கத் தேவையில்லை. அதுவே தண்ணீர் சூடான பின்னர் தானாக அணையும் வடிமைப்பைக் கொண்டது. தண்ணீரை சூடு செய்வது எளிய காரியம் ஆகிவிட்டாலும், அதை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதை முறையாக பராமரிக்காவிட்டால் சில ஆபத்துகளும் நேரிட வாய்ப்புள்ளது.
பழைய மாடல் வாட்டர் ஹீட்டரில் தானாக 'ஆப்' ஆகும் ஆப்ஷன் கிடையாது. நாம் தான் கவனமாக பார்த்து போதிய அளவிற்கு தண்ணீர் வெப்பமடைந்ததும் அணைக்க வேண்டும். குறிப்பாக பழைய மாடல் வாட்டர் ஹீட்டரை தண்ணீரில் வைக்கும் போது குறிப்பிட்ட அளவிற்கு தான் ஹீட்டர் மூழ்குமாறு வைக்க வேண்டும். இல்லையென்றால் மின்சாரம் கசிய வாய்ப்புள்ளது. தண்ணீர் சூடாகி விட்டதா? என சோதிக்க நேரடியாக கைகளை உள்ளே விடக்கூடாது. இதனால் ஒருவேளை மின்சாரக் கசிவு இருந்தால் உங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ரூ.6000 வரை மானியம்! மின்சாரமே இல்லாமல் இந்த வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தலாம்!
வாட்டர் ஹீட்டர் வாங்க டிப்ஸ்!!
பழைய மாடல் வாட்டர் ஹீட்டர்களை விட தற்போது வந்துள்ள புதிய மாடல் வாட்டர் ஹீட்டர்கள் பல வகைகளில் வசதியாக உள்ளன. புதியதாக வாட்டர் ஹீட்டர் வாங்கும் திட்டம் உங்களுக்கு இருந்தால் ஐஎஸ்ஐ (ISI) குறியீடு கொண்ட சான்றிதழ் இருக்கிறதா என சோதித்து பார்த்து வாங்கவும். இத்துடன் அந்த ஹீட்டருக்கு எத்தனை ஸ்டார் மதிப்பெண்கள் கொடுத்து இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அதிகமான ஸ்டார் ரேட்டிங் உடன், ஐஎஸ்ஐ குறியீடுடன் இருக்கும் ஹீட்டர்கள் பாதுகாப்பானவை. விலை மலிவாக கிடைக்கும் ஹீட்டர்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவற்றின் தரத்தை குறித்து எந்த உத்தரவாதமும் இருக்காது. தரம் குறைந்த சில ஹீட்டர்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் வெடித்து சிதறும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.
இதையும் படிங்க: 75% வரை தள்ளுபடி.. ஹீட்டர் முதல் ட்ரிம்மர் வரை எல்லாமே குறைந்த விலைதான்!
வீட்டில் வாட்டர் ஹீட்டரை பொருத்துவதாக இருந்தால் நிபுணரின் உதவியுடன் பொருத்துவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். ஏனென்றால் சரியான நிபுணர் வந்து பொருத்துவதால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. வாட்டர் ஹீட்டரின் பவர் அவுட்லெட் எப்போதும் சுவரில் படக் கூடாது. அதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.
வாட்டர் ஹீட்டரை குளியலறையுடைய மேற்பரப்பில் பொருத்த வேண்டும். அதை இயக்க வசதியாக சாக்கெட் ஹீட்டரின் அருகில் வைக்க வேண்டும். எதற்காக இரண்டையும் உயரமாக வைக்க வேண்டும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். குளிக்கும்போது ஹீட்டரின் மீது தண்ணீர் படாமல் இருப்பதுதான் பாதுகாப்பானது. அடிக்கடி ஹீட்டரின் மீது தண்ணீர்படுவது அது சேதமடைய வழி வகுக்கும்.