இன்னும் நான்கு நாட்களில் 10 11 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், திறன் மேம்பாடு முறையின் படி, ஆசிரியர்களுக்கு திறனை மேம்படுத்த விரைவில் உரிய பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றும்,அரசு பள்ளிகளில் கையிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்க ஆயத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் செங்கோட்டையன்.

மேலும் இது தொடர்பாக மலேசியாவில் இயங்கும் ஓர் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மற்ற சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி pdf வடிவில் பாடங்களை பதிவிறக்கம் செய்து மிக எளிதாக மாணவர்கள் பயில ஏதுவாக பல்வேறு சிறப்பு அம்சங்களை உருவாக்கி தருவதற்காகவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற காலம் முதலே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தருணத்தில், தற்போது மாணவர்களுக்கு ஏதுவாக அனைத்து முறைகளிலும் எளிதாக பயிலும் முறையை கொண்டுவர அமைச்சர் எடுத்து வரும் ஒவ்வொரு முடிவும் மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.