Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த அதிரடி அறிவிப்பு..!

வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். 

minister senkottaiyan new announcement in thiruvallur
Author
Chennai, First Published Feb 15, 2019, 7:42 PM IST

அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த அதிரடி அறிவிப்பு..! 

வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில்  கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு திறன் பயிற்சி அளித்து வருகிறது என்றும், வரும் கல்வி ஆண்டில் திறன் பயிற்சிக்காக 12 புதிய பாடத்திட்டம் இணைக்கப்படும் என்றும் கல்வியை முடித்தவுடன் வேலை வாய்ப்பு உத்தரவாதம் தருகிற பணியில் தமிழக அரசு ஈடுபடும் என்றும் தெரிவித்தார். 

minister senkottaiyan new announcement in thiruvallur

இது வரை இல்லாத அளவுக்கு கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 759 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருப்பதாகவும், மேலும், வருகிற கல்வியாண்டில் எல்கேஜி யூகேஜி வகுப்பில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை நடைபெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு அமைதியான மாநிலம் என்றும், மின்சாரம் மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தொழில் வளம் சிறந்து அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios