அவசரமாக காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செங்கோட்டையன்..! ஏன் தெரியுமா..? 

விபத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த குடும்பத்தினரை அவ்வழியாக சென்ற அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய மற்றொரு காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரையு நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோபி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன் என்பவர். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் ஈரோடு சென்றுள்ளார். அப்போது தாசம்பாளையம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தில் உரசி உள்ளது. அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூவருக்கும் அடிபட்டுள்ளது. குழந்தைக்கு தலையில் அடிபட்டு உள்ளது. 

இதனை அவ்வழியாக வந்த அமைச்சர் செங்கோட்டையன் பார்த்தபோது உடனே வாகனத்தை நிறுத்தி மற்றொரு காரில் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு மருத்துவரைதொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.