மாணவர்களுக்கு குஷியான  செய்தி..! 

மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் குறித்த விவரங்களை உடனடியாக அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களுக்கு தேவையான பல முக்கிய திட்டங்களையும், கல்விக்காக பல்வேறு சேவைகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையில் அடுத்தகட்ட வளர்ச்சியாக மாணவர்களுக்கு எளிதில் பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் மீண்டும் ஒரு பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அது குறித்த விளக்கத்தை தெரிந்து கொள்வதற்காகவும், கல்விக்காகவே ஒரு தனி சேனல் தொடங்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். 

அதன்படி தேர்தல் முடிவுக்குப் பிறகு தனி சேனல் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீன கல்வி முறை மூலம் மிக எளிதாக விளக்க வைக்க முடியும். அதே போன்று தற்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பாக வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் சாதாரண நடுத்தர வர்க்கத்தினரும் ஏழை மக்களும் கல்வியைப் பொறுத்தவரையில் அரசுப் பள்ளியிலேயே குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை பெற முடியும் என்பதை நிரூபணம் செய்துள்ள அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.