சிபிசிஐடி கைது செய்த ஐயப்பன் யார் தெரியுமா..? போட்டுடைத்த அமைச்சர் ஜெயக்குமார்..!

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற புதிய விதியை எதிர்த்து, அதனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜாவடேகரிடம் அமைச்சர் ஜெயக்குமார் இன்று வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது, "வேளாண் தொடர்பாக கோரிக்கையை பரிசீலித்து இன்னும் 4 நாட்களில் நல்ல முடிவை மத்திய அரசு எடுக்கும் என தெரிவித்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் கடலூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மக்களை பாதிக்காத வகையில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார். பின்னர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த முறைகேடுகள் எல்லாம் திமுக காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனி செடிகள்.. இதற்கான நெட்வொர்க்கை அன்றே ஏற்படுத்திட்டாங்க...இப்போது அதனை ஒவ்வொன்றாக களை எடுத்து வருகிறோம்.... அதற்கு ஆதாரமாக, தற்போது சிபிசிஐடி கைது செய்துள்ள ஐயப்பன் என்பவர், திமுகவின் அப்பாவு என்பரின் நெருங்கிய நண்பர் என்றும் தெரிவித்து உள்ளார்.

தன்னை முந்திரிக்கொட்டை என விமர்சனம் செய்த எல் போர்டு உதயநிதி இதற்கு என்ன பதல் சொல்லப்போகிறார் என சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.