அமைச்சர் ஜெயக்குமாரை பெயரிட்டு கூப்பிட்ட சிறுவன்..! வீடியோவில் "முக்கிய செய்தி" ..! 

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 இலிருந்து 81 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக எப்படி கைகழுவ வேண்டும், மாஸ்க் அணிவது, ஒருவரிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது, கூட்டத்தில் செல்லாமல் இருப்பது... இதுபோன்ற பல்வேறு விஷயங்களை மக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் பேரன் (ஜெயசிம்மனின் மகன்) கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

அதில், "அனைவருக்கும் வணக்கம்... நாம் உண்ணும் முன் கண்டிப்பாக கைகளை நன்கு கழுவி விட்டு தான் உண்ண வேண்டும். எப்போதும் கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். கொரோனாவை தடுப்பதற்கு இது மிக முக்கியம் என தெரிவித்துள்ளார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்...இவர் பேசி முடிக்கும்போது "bye ஜெயக்குமார்.." என தெரிவிக்கிறார்.

"

 அதாவது தன் தாத்தாவான அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை அன்பின் மிகுதியால் உரிமையாக பெயரிட்டு அழைக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு மட்டுமல்லாமல்.. அமைச்சர் ஜெயக்குமாரை பாசத்தின் மிகுதியாக செல்ல பேரன் "ஜெயக்குமார்" என அழைப்பது ஒருவிதமான நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.