அடுத்து வரும் 24 மணி நேரத்தில்....! மழை எச்சரிக்கை..? வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன..? 

இலங்கையின் தென்கிழக்கு தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் உள் தமிழகத்தை பொறுத்தவரையிலும் பொதுவாகவே வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரையில் வானம் எப்போதும் உள்ளவாறு சில சமயங்களில் மேகமூட்டத்துடன் சில சமயங்களில் வெயிலும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எந்த எச்சரிக்கையும் கிடையாது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட்டு சொல்லும்பட எங்கும் மழை பதிவாகவில்லை.

சென்னையில் கடந்த ஒரு வார காலமாகவே,மிதமான மழை இருந்து வந்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளுமையான கிளைமாட்டை என்ஜாய் செய்தனர் சென்னை மக்கள்