நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் மக்கள் அதிகரித்து வருகின்றனர்.  

மேலும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் போது,நேரம் வீணாவதை தடுக்க முடியும், எளிதாக பயண தூரத்தை விரைவில் அடைய முடியும், எந்த அலைச்சலும் இல்லை, அதுமட்டுமா கோடைகாலம் நெருங்கி விட்டதால் இருசக்கர வாகனத்தை இயக்கவே பெரும் சிரமமாக இருக்கும்... காரணம் சுட்டெரிக்கும் வெயில் தான்.

இதனையெல்லாம் உணர்ந்த மக்கள் தற்போது மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த மும்முரம் காட்டி வருகின்றனர்.மெட்ரோ ரயில் நிர்வாகமும் மக்களின் தேவையை கருத்தில் கருத்தில் தற்போது ஒரு நல்ல முடிவை எடுத்து உள்ளது. அதன் படி, தற்போது காலை 6 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, விரைவில் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது 

இந்த  திட்டம் அமலுக்கு வந்த உடன், அதிகாலை, 4:30 மணியில் இருந்து இரவு, 11:00 மணி வரை ரயில்கள் இயக்கவும், மேலும் பயணிகளின் வருகையை பொறுத்து, ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.