மேஷம் முதல் கன்னி ராசிப்பலன்..!

மேஷ ராசி நேயர்களே..! 

உங்களுக்கு தொலைபேசி வாயிலாக ஒரு நல்ல செய்தி வந்தடையும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ கூடிய நாள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.
உத்தியோகத்தில் மிக சிறப்பாக செயல்படும் நாள் இது.

ரிஷப ராசி நேயர்களே..!

உங்களுக்கு பண செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. வீடு மாற்றங்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள். சகோதரர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில், ஆதாயம் உங்களுக்கு உண்டு.

மிதுன ராசி நேயர்களே...! 

தங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். 

கடக ராசி நேயர்களே...!

வெளிவட்டாரப் பழக்கம் உங்களுக்கு அதிகரிக்கும். உடல் நலம் சீராக வைத்துக் கொள்ள வேண்டியது நல்லது.குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக உழைப்பீர்கள்.

சிம்மராசி நேயர்களே..!

சந்தோஷம் அதிகரிக்கும் நாள் இது. பக்குவமாக பேசி எடுத்த காரியங்களை எளிதாக நடத்தி காட்டுவீர்கள். ஒரு நல்ல மாற்றம் ஏற்படலாம். தங்களுடைய சிந்தனை மேலோங்கும். மன ஆறுதல் தரும் சில விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துவது நல்லது.

கன்னி ராசி நேயர்களே..!

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள் இது.எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசனை செய்து நடவடிக்கை எடுப்பது நல்லது. முன் கோபமும் எரிச்சலும் உங்களுக்கு வந்து சேரலாம்.