2019 இல் ஏற்படும் கிரகணம்..! மேஷம் முதல் கன்னி ராசி வரை ஏற்படும் மாற்றம் இதோ..! 

இந்த ஆண்டுமட்டும் மூன்று முறை சூரிய கிரகணம் ஏற்பட வாய்ப்பு  உள்ளது. அதன்படி முதலாவதாக  ஜனவரி 5, 6  இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை 2 , மூன்றாவது சூரிய  கிரகணம் டிசம்பர் 26. இந்த மூன்று சூரிய கிரகணம் ஏற்படும் கால நிலையில்12 ராசியினருக்கு ஏற்படும் மாற்றம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் 

முதல் சூரிய கிரகணம் ஏற்பட்ட பிறகு உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான உறுதியான மனப்பான்மையை ஏற்படுத்தும் ஆக்கபூர்வமான வழிகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டாவது சூரிய கிரகணம் முடிந்த பிறகு உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தவேண்டும். வருடத்தின் இறுதியில் வரக்கூடிய சூரிய கிரகணம் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி தொழில் துறையிலும் சரி இரண்டையும் சரிசமமாக கொண்டு போகக்கூடிய மன நிலைக்கு நீங்கள் ஆளாக வேண்டும். 

ரிஷபம்  

முதல் சூரிய கிரகணம் ஏற்பட்ட பிறகு உங்களுடைய நிதி நிலைமை சற்று மேம்படும்.இரண்டாவது சூரிய கிரகணம் ஏற்பட்ட பின்பு உங்களுக்கு நல்ல ஒரு நட்பு வட்டாரம் ஏற்படும். மூன்றாவது சூரிய கிரகணம் ஏற்படும்போது உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு தேவையான ஒரு வழி பிறக்கும்.

மிதுனம்

முதல் சூரிய கிரகணம் ஏற்படும்போது உங்களுடைய திறமையை ஊக்குவிக்கும். உங்களிடம் இருந்து வந்த பயம் அகன்றுவிடும். உங்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கிறது. இரண்டாவது சூரிய கிரகணம் ஏற்பட்ட பின்பு பல நல்ல யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். மூன்றாவது சூரிய கிரகணம் ஏற்பட்ட பின்பு நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதனை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். ஒரு தெளிவு பிறக்கும்.

கடகம் 

முதல் சூரிய கிரகணம் முடிந்த பின்பு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். இரண்டாவது கிரகணம் ஏற்படும்போது உங்களுடைய நீண்ட நாள் கனவு குறித்து முழு சிந்தனையுடன் இருப்பீர்கள். மூன்றாவது சூரிய கிரகணம் ஏற்படும் போது உங்களுக்கு இருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்களை பெறுவீர்கள். அமைதியான மனநிலை ஏற்படும் வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள்.

சிம்மம் 

முதல் சூரிய கிரகணம் ஏற்படும் போது நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். இரண்டாவது சூரிய கிரணம் வரும் போது நல்ல ஒரு மேம்பட்ட நிலையை அடைவீர்கள்.உங்கள் வாழ்வில் வெற்றி அடைய இது தான் சரியான நேரமும் கூட. மூன்றாவது சூரியகிரணம் ஏற்படும் போது உங்கள் வாழ்க்கையில் பல சந்தோஷங்களை காணப்போகிறீர்கள். உங்களை சுற்றி பல முன்னேற்றங்கள் இருக்கும்.

கன்னி 

முதல் சூரிய கிரகணம் ஏற்படும் போது ஒரு தெளிவு பிறந்திருக்கும். இரண்டாவது சூரிய கிரகணம் முடிந்த பின்பு உங்களுக்கு உண்டான பாதையை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள். நீண்ட நாள் இருந்து வந்த ஒரு விதமான மன அழுத்தம் நீங்கும். மூன்றாவது சூரிய கிரகணம் ஏற்படும் போது ஒருவிதமான தெளிவு பிறந்து வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு நகர கூடிய வாய்ப்பை பெறுவீர்கள்.