மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன் 

மேஷ ராசி நேயர்களே..! 

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி உங்களை தேடி வரும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நாள் இது.

ரிஷப ராசி நேயர்களே..!

செலவுகளை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். உணவு விஷயத்தில் கண்டிப்பாக கட்டுப்பாடு தேவை.

மிதுன ராசி நேயர்களே..! 

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும் நாள் இது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். திடீர் பயணங்களும் ஏற்படக்கூடிய நாள் இது.

கடக ராசி நேயர்களே...!

சொந்த முயற்சியில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய செல்வாக்கு கூடும். சொந்த பந்தங்களில் சிலரின் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள்.  சில விருப்பப்பட்ட பொருட்களை வாங்கி மகிழும் நாள் இது.

சிம்ம ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் கௌரவம் கூடும் நாள் இது. உங்களால் மேன்மேலும் வாழ்க்கையில் வளர்ச்சி அடைந்த சிலர் மீண்டும் உங்களை வந்து சந்திக்க நேரிடலாம். பிரபலமானவர்கள் ஆதாயம் கிடைக்கும் நாள் இது. 

கன்னி ராசி நேயர்களே...!

குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவுக்கு வந்தடையும். சொந்தபந்தங்கள் மத்தியில் உங்களது மரியாதை அதிகரிக்கும்