மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே.! 

பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் நாள் இது. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கி ஆயத்தமாவீர்கள். புதிய நபரின் அறிமுகத்தால் ஆதாயம் அடையும் நாள் இது.

ரிஷப ராசி நேயர்களே...!

வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் அலைச்சல் என்று நினைத்தாலும் உங்களுக்கு ஆதாயம் எப்படியும் வந்து சேரும். புதுவேலை கிடைக்கும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் அதனை சமாளிக்கக்கூடிய திறன் பெற்று விளங்கும் நாளிது.

மிதுன ராசி நேயர்களே..!

வீண் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் நீங்கி சுமுகமாக வாழ்க்கை நடத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் எப்போதும் விட்டு கொடுத்து செல்வது நல்லது

கடக ராசி நேயர்களே...!

வீடு மனை வாங்குவது விற்பது என அனைத்திலும் மும்முரம் காட்டும் நாளில் இது. சொந்தபந்தங்கள் உங்களுக்கு அதிக மதிப்புக் கொடுப்பார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கப்பெறும் நாள் இது.

சிம்ம ராசி நேயர்களே..!

எந்த விஷயத்திலும் ஒரு தெளிவான முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவு வந்து போகும் நாள் இது. யார் மனம் புண்படும் படி பேசாதீர்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் மன கஷ்டம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செலவு அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச கூடாத நாளிது. நிதானமாக எந்த காரியத்திலும் ஈடுபடுவது நல்லது.