மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே..! 

அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்க கூடிய நாள்  இது. பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் நாள் இது. விருந்தினர் வருகையால் உங்கள் வீடு மகிழ்ச்சியாக காணப்படும்.

மிதுன ராசி நேயர்களே...!

புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும் நாள் இது. குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். எப்போதும் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

உங்கள் பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்ல வேண்டிய நாள். உங்களுக்கு சிலர் உதவுவது போல் வந்து பல பிரச்சினைகளை உண்டுபண்ணுவார்கள். வீடு வாகனம் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி நேயர்களே..!

பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். உங்களைப் பிரிந்து சென்ற உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

பழைய உறவினர்களையும் நண்பர்களையும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து பேசுவீர்கள் கடன் பிரச்சினையைத் தீர்க்க வழிவகை பிறக்கும்.