மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே...!

தடைப்பட்டுவந்த பல காரியங்கள் இன்று விரைவாக முடியும். சொந்த பந்தங்களுக்கு மத்தியில் அதிக மரியாதை கொடுக்கப்படுவீர். மனைவி வழியில் உங்களுக்கு ஆதாயம் வந்து சேரும்.

ரிஷப ராசி நேயர்களே...!

சில காரியங்களை போராடி வெற்றி அடைய சூழ்நிலை ஏற்படும். அனாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ அல்லது உதவியோ செய்யமுன்வராதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுன ராசி நேயர்களே...!

மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிக்க வேண்டிய நாள் இது.  விருந்தினர் வருகையால் உங்களது வீடு மகிழ்ச்சி அடையும். ஆடை ஆபரணங்களை வாங்க கூடிய நாள் இது. திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

கடக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். கடன் பிரச்சினையைத் தீர்க்க வேறு எந்த வழி உள்ளது என சிந்தனை செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அன்னோன்யம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களது பிரியமான நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்ப நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுடன் திடீர் சந்திப்பு ஏற்படலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை இழக்காமல் விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு.