மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே...!

இன்று உணர்ச்சிவசப்படாமல் நடந்துகொள்வது நல்லது. எதிலும் ஒரு பிடிப்பு இல்லாத மனநிலையில் இருப்பீர்கள். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுக்கு ஒரு குழப்பமான நாளாக அமையும்.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களுடைய இலக்கை நோக்கி செல்வீர்கள். பொறுப்புகளும் பதவிகளும் உங்களை தேடி வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். எதை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களுடைய ஆளுமைத்திறன் இன்று அதிகரிக்கும். பிரபலமானவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பெரிய பதவிகளுக்கு உங்களை தேர்ந்தெடுக்கலாம். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

கடக ராசி நேயர்களே...! 

எத்தனை பிரச்சனை வந்தாலும் தைரியமாக சமாளிக்கும் நாள் இது. மன வலிமையும் உடல் வலிமையும் அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையுடன் இன்று நேரத்தை செலுத்துவீர்கள். பல பிரபலங்கள் உங்களுக்கு நட்பாக இருப்பார்கள். வீடு வாகனத்தை வாங்க திட்டமிடுவீர்கள். 

கன்னி ராசி நேயர்களே..! 

மன உறுதி அதிகமாக இருக்கும். புதிய யோசனைகள் பிறந்து பல திட்டங்களை தீட்டுவீர்கள். உடல் நலனில் அதிக அக்கறை தேவை