மேஷம் முதல் கன்னி  வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே...! 

உங்களுடைய கல்யாணம் முயற்சி கைகூடக் கூடிய நாள் இது. அயல்நாட்டிலிருந்து நல்ல ஒரு செய்தி உங்களை வந்தடையும். நாளைய வேலைகளை இன்றே சேர்த்து செய்யக் கூடிய சூழல் உருவாகும். சொத்துக்கள் விற்பது வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

சிறப்பான வாழ்க்கை அமைய கோவில் வழிபாட்டை மேற் கொள்வீர்கள்.அடுத்தவர்களின் ஆலோசனைகளால் உங்களுக்கு அமைதி கிடைக்க வாய்ப்பு உண்டு. வாகன பழுதுகளை சரி செய்து பயன்படுத்த திட்டமிடுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

ஆலய வழிபாட்டால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக நீங்க செய்ய நினைத்த காரியம் ஒன்றை இன்று செய்து முடித்து சந்தோஷமாக இருப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

சொந்தங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றும் சூழல் உருவாகும். எதிர்பாராத பண வரவுகளால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் எப்போதும் உங்களுக்கு ஏமாற்றம் நேரிட வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். மனதிற்கேற்ற சம்பவங்கள் சில நடக்கலாம். உங்களுடைய தொழிலில் சில மாற்றங்களை கொண்டு வந்து அடுத்த கட்ட முயற்சியில் ஈடுபடுவீர்கள். நல்ல நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

நினைத்த காரியம் நிறைவேறும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீங்கள் தேடி சென்று வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்