மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

உங்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு வந்து சேரும். அனாவசியமாக யாருக்காகவும் எந்த வார்த்தையையும் கொடுத்துவிடாதீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே...!

சகோதரர் வகையில் உங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் நாள். இதுவரை இருந்து வந்த பல பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு காண்பீர்கள்.  உடல் நிலையில் அக்கறை காண்பிப்பது நல்லது.அடிக்கடி மனைவியுடன் கருத்து மோதல் ஏற்படலாம்.

மிதுன ராசி நேயர்களே..!

உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.வெளியில் இருந்து  வரவேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டு வியப்படைவீர்கள். விருந்தினர் வருகையால் உங்கள் வீடு கலகலப்பாக காணப்படும்.

கடக ராசி நேயர்களே..!

சவாலான காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நாள் இது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வார்கள்.

சிம்ம ராசி நேயர்களே..!

உங்களுடைய ஆளுமைத்திறன் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அடிக்கடி தலை காட்டிய உங்களுடைய முன்கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சந்தோஷமாக இருப்பீர்கள். தேவையான அளவிற்கு பணம் வந்து சேரும். கடன் பிரச்சனையில் இருந்து விலக பல திட்டங்களை தீட்டுவீர்கள்.