மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள் இது. வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்களுக்கு தாமாக முன் வந்து உதவி செய்வார்கள். எதிர்பாராத பண செலவு ஏற்படும்.

ரிஷப ராசி நேயர்களே...!

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க கூடிய நாள் இது. எதிர்காலத்தை கருதி முக்கிய நபர்களை சந்தித்து திட்டம் தீட்டுவீர்கள். இல்லத்தில் மங்களகரமான சில விஷயங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களுக்கு இன்று மகிழ்ச்சி தரும் நாள். திட்டமிட்ட பல காரியங்கள் இன்று நிறைவேறும்.முன்கோபத்தை தவிர்த்துக் கொள்வது சிறந்தது.

கடக ராசி நேயர்களே...!

உங்களுக்கு சில விஷயங்கள் சாதகமாக அமையும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உங்கள் இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பில் இருந்து கொஞ்சம் பணம் எடுக்க நேரிடலாம். நீண்டகால நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே..!

உங்களுக்கு இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். உங்களது உறவினர் மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை தேவை.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் நாள் இது. தொழிலில் புதிய முதலீடு செய்ய ஆர்வம் காண்பிப்பீர்கள். அலுவலக பணிகளை மிக எளிதாக செய்து முடிப்பீர்கள்.