மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

மேஷ ராசி நேயர்களே...!

சொத்துக்களால் உங்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும் நாள் இது. உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள பல்வேறு சிந்தனையில் ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக புதிய புதிய பொறுப்புகள் உங்களை வந்தடையும்.

ரிஷப ராசி நேயர்களே...!

ஆலய வழிபாட்டால் உங்களுடைய மனது நிம்மதியாக இருக்கும். வாகனங்கள் தொடர்பாக திடீரென சில செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களை யாராவது எரிச்சலூட்டினால் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். அதுவே அவர்களுக்கு பெரிய தண்டனையாக அமையும்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள் இது. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த உங்களுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுடைய வளர்ச்சிக்காக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடிய நேரம் பிறக்கும்.

கடக ராசி நேயர்களே...!

உங்களுடைய நட்புக்கு எந்த பங்கமும் ஏற்படாதவாறு நண்பர்களுடன் பேசுவது நல்லது. உத்யோகத்தில் உங்களுடைய மேலதிகாரிகளை சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது.

சிம்ம ராசி நேயர்களே...!

வியாபார பொருட்களை மிக எளிதாக சமாளிக்கும் நாள் இது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரித்து ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண பேச்சு போன்ற நல்ல விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு வரக்கூடிய நாள் இது