மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே...!

உங்களுக்கு இது சாதகமான நாள். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அனைவரும் உங்களை நெருங்கி வருவார்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நிதானம் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ரிஷப ராசி நேயர்களே..!

பல சவால்களில் வெற்றி பெறும் நாள் இது. திருமண பேச்சு வார்த்தை நடைபெறும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

ரிஷப மிதுன ராசி நேயர்களே..!

கடந்த கால இனிய நிகழ்வுகளை பற்றி சிந்திப்பீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளியில் பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

கடக ராசி நேயர்களே...!

புதிய பலரின் அறிமுகத்தால் உங்களுக்கு நன்மை வந்தடையும். இதுவரை இருந்துவந்த பிரச்சினை படிப்படியாக குறைய தொடங்கும். பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும்.

சிம்ம ராசி நேயர்களே..!

இதுநாள் வரை இருந்து வந்த பணத்தட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைப்பீர்கள். உறவினர்கள் வலிய வந்து உங்களுடன் பேசுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள் இது.

கன்னி ராசி நேயர்களே...!

உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரை அணுகாமல் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. உணவு உடல் நலத்தில் கண்டிப்பாக கவனம் தேவை. திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டிவரும்.

துலாம் ராசி நேயர்களே...!

தவிர்க்க முடியாத சில செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதர வகையில் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சற்று தாமதமாக வரும்.