மேஷ ராசி நேயர்களே...!

இன்றைய தினத்தில் புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

ரிஷப ராசி நேயர்களே...!

எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள் நீங்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முற்படுவீர்கள். பல பொருட்களை வாங்கி மகிழும் நாள் இது. சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.

கடக ராசி நேயர்களே...!

தர்மசங்கடமான பல சூழ்நிலைகளை சமாளித்து வெற்றி பெறும் நாள்  இது.  நண்பர்களால் அவ்வப்போது பிரச்சினைகள் வந்துபோகும். யாருக்கும் பணத்தை வாங்கி தர வேண்டாம்.

சிம்ம ராசி நேயர்களே...!

திடீர் திடீர் செலவுகள் ஏற்படும் நாள் இது. பழைய நகையை மாற்றி புது நகைகளை வாங்க முற்படுவீராகள். வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். திடீரென உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வரலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

மனதில் இன்று புதிய மகிழ்ச்சி பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உங்களுடைய பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.