மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்...!

மேஷ ராசி நேயர்களே...! 

உங்களுக்கு இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். உறவினர்களால் சில பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.'

ரிஷப ராசி நேயர்களே..!

பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண குடும்பத்தினருடன் கலந்து ஆலோசிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. வீடு வாகனத்தை சீர் செய்யும் நாள் இது. 

மிதுன ராசி நேயர்களே...! 

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் நாள் இது. இதுவரை சரியாக செய்து முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் முடிவடையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே...!

தேவையற்ற பல விஷயங்களை நினைத்து குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும்.

சிம்ம ராசி நேயர்களே..!

கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்வது சிறந்தது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையாக இருக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் வந்து போகும். 

கன்னி ராசி நேயர்களே..!

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். தடை தாமதம் ஏற்பட்டாலும் இலக்கை நோக்கி நீங்கள் பயணித்து கொண்டிருப்பீர்கள். வீட்டை புதுப்பிக்க பல திட்டங்களை போடுவீர்கள்.