மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே...!

எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள் இது. சொந்த பந்தங்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். மகிழ்ச்சி உண்டாக்கும் நாள் இது.

ரிஷப ராசி நேயர்களே..!

விருந்தினர் வருகையால் கலகலப்பான சூழல் நிலவும். உங்களுடைய ஆலோசனையை உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேட்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

தாயாருடன் எதிர்பாராத வகையில் மனக்கஷ்டங்கள் வந்து நீங்கும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது ஆகச்சிறந்தது.

கடக ராசி நேயர்களே..!

சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுவதை தவிர்க்கவேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வீண் செலவுகளும் உண்டாகும்.

சிம்ம ராசி நேயர்களே..!

எந்த ஒரு வேலையை தொடங்கினாலும் கண்டிப்பாக வெற்றி அடையும். வாகன வசதி பெருகும். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பல வேலைகள் முடிவுக்கு வரும்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களின் ஆளுமைத்திறன் நாளுக்கு நாள் அதிகரிக்கும். சவாலான பல காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு எப்போதும் செல்வாக்கு அதிகரிக்கும்.