மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே...!
 
இன்றைய நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்க கூடும். வீட்டை அலங்கரிக்க செய்வீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசக் கூடிய நாள். அவர்களை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியம் விரைவில் நடந்தேறும்.

மிதுன ராசி நேயர்களே..!

குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி மற்றவர்களிடம் குறை சொல்ல வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட மற்றவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

கடக ராசி நேயர்களே...!

விடாப்பிடியாக செயல்பட்டு நீங்கள் எடுத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். 

சிம்ம ராசி நேயர்களே...!

முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த வெறுப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.

கன்னி ராசி நேயர்களே..! 

ஏமாற்றம் உங்களுக்கு அவ்வப்போது வரும். பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும்.