மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..!

மேஷ ராசி நேயர்களே..! 

அலைபேசி வழியில் உங்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை சேரும்.

ரிஷப ராசி நேயர்களே..!
.
தெய்வப் பற்று அதிகரிக்கும். நீண்ட நாளாய் பார்க்க வேண்டும் என நினைத்த நண்பர் உங்களை தேடி வருவார். நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கவுள்ள வியாபாரம் வெற்றி பெறும். உறவினர்கள் உதவி செய்வார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர வழி ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

கடக ராசி நேயர்களே..!

பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி கிடைக்கும். வருமானம் வரும் வழியை தெரிந்து கொள்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே..!

திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். பிரியமான நண்பர் ஒருவருடன் இருந்துவந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

கன்னி ராசி நேயர்களே...!

நீங்கள் எடுக்கும் உத்தியோக முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலை ஒழுங்கு படுத்துவது நல்லது. உறவினர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.