எந்த ஒரு ராசிக் காரர்களும் அந்த ராசிக்கான ஆதிக்கத்தை கொண்டு உள்ளனர். அதாவது ஒவ்வொரு ராசியும் மிக சிறந்த பண்பை கொண்டு உள்ளது.அதாவது, பிரபஞ்சத்தை உருவாக்கும் நான்கு அம்சங்களை சேர்ந்தது. காற்று நீர் நெருப்பு பூமி ஆகியவற்றில் ஒன்றை கொண்டு உள்ளது.

மேஷம் - இது அடையாளம். 

நெருப்பு எப்போதும் மேல் நோக்கி தான் எரியும். அதே போன்று தான் இவர்களும் எப்போதும் மேல்நோக்கியே சிந்தனை கொண்டு இருப்பார்கள். எதனையும் ஆழமாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். வாழ்வில் வெற்றி அடைய காத்திருக்கும் நபர்கள் இந்த ராசிக்காரர்கள்.

ரிஷபம் 

பூமிக்கு அடையாளமாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் எப்போதும் சொத்துக்களை சேர்க்க விரும்புவார்கள். மேலும் வாழ்வில் அமைத்தித்தன்மை மிகவும் முக்கியம் என்பதை நன்கு அறிந்தவர்கள். உறவினர்களுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

மிதுனம் : 

காற்றின் அடையாளமாக திகழ கூடியவர்கள் 

மகிழ்ச்சியாக வாழ தெரிந்தவர்கள். இவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் பேச தொடங்கிவிட்டால், சுற்றி இருப்பவர்கள் இவர்கள் பேச்சை தான் அதிகம் கேட்பார்கள். எப்போதும் மற்றவர்கள் மத்தியில் தனக்கென்று தனி மரியாதை கொண்டவர்களாக இருப்பவர்கள்.

கடகம் : 

நீரின் அடையாளமாக திகழ கூடியவர்கள். இவர்கள் எப்போதும் அன்பாக இருக்கக்கூடியவர்கள்.  பாதிக்கபட்டவர்களுகு எந்த நேரத்திலும், தோள் கொடுத்து பாதுகாக்க நினைப்பவர்கள். அன்புக்கு இவர்களிடம் குறையே இருக்காது.

சிம்மம் : 

நெருப்புக்கு அடையாளமாக இருக்கக்கூடிய நபர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்கள் தலைமை பண்பை  அதிகம் விருப்புபவர்கள். இந்த உலகம் என்ன என்பதை மிகவும் ஆழமாக புரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு மக்களை மிக அழகாக வழி நடத்துபவர்கள்

கன்னி:  

கன்னி ராசியினர் அனைத்தையும் சமாளிக்க கூடியவர்கள். வாழ்வில் எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு என்ன வழி என்று மிக அழகா பகுத்தறிவுடன் யோசனை செய்து பிரச்சனைக்கு மிக எளிதில் முடிவு எடுத்து விடுவார்கள்.