மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே...!

மற்றவர்களின் வேலையில் தலையிடாமல் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்ல கூடிய நாள். உங்களது உறவினர்கள் உங்களை நாடி வந்து பேசுவார்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

உங்கள் குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். மற்றவர்களுக்காக சாட்சிக் கையெழுத்திட, உத்தரவாதம் தர கண்டிப்பாக கூடவே கூடாது. மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு உங்களைப் பற்றி சிந்தியுங்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி வந்தாலே அனைத்து பிரச்சினைக்கும் சுமுகமாக தீர்ந்துவிடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகராசி நேயர்களே...!

உங்களது சிந்தனை வலுப்பெறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது பாசமழை பொழிவார்கள். பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை பேச வேண்டிய சூழல் ஏற்படலாம்.

சிம்ம ராசி நேயர்களே...!

பலநாள் தடைப்பட்ட வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம்.

கன்னி ராசி நேயர்களே..!

உங்களுக்குள் சில சமயம் தாழ்வு மனப்பான்மை வரும். அடுத்தவர் மனம் காயப்படும் படி நடந்து கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த உதவிகள் உங்களை வந்தடையும்.