மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

மேஷ ராசி நேயர்களே..! 

உங்களுக்கு இன்றைய நாளில் அலைபேசி வழியாக ஒரு நல்ல செய்தி வந்து சேரும். உற்சாகத்தோடு காணப்படுவீர்கள். பல நெருக்கடிகள் வந்து தீரும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய நாள் இது.

ரிஷப ராசி நேயர்களே..!

பிரபலங்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். காசு பணம் உங்களை வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம்.

மிதுன ராசி நேயர்களே..! 

உங்களுக்கு நல்ல காலம் பிறக்க உள்ளது. சுப நிகழ்வுகள் நடக்கக்கூடும். பேச்சுத்திறமையால் எந்த ஒரு பிரச்சனையில் இருந்தும் விடுபடுவீர்கள். தொழில் தொல்லை அகல கூடிய நாள் இது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள்  உங்களது வீட்டிற்கு வருகை புரிவார்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.

சிம்மராசி நேயர்களே..!

வங்கி சேமிப்பை உயர்த்த திட்டமிடுகிறீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெற தொடங்கும் வெளிநாட்டில் இருந்து ஒரு நல்ல செய்தி உங்களை வந்தடையலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள் இது.