மேஷம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!  

மேஷ ராசி நேயர்களே.! 

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்வீர்கள். தொழில்ரீதியாக புதிய புதிய ஒப்பந்தங்கள் இன்று உங்களை வந்தடையும். கட்டிடம் கட்டும் பணியில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் பிறக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

ஆன்மீக வழிபாடு மேற்கொள்ள உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களுக்கு பிடித்தமான சிலரிடம் பேசும் சூழ்நிலை உருவாகலாம். உடல்நலனில் அக்கறை தேவையான நாள் இது.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களுக்கு இது யோகமான நாள். உங்களிடம் வேறுபட்டு பேசக்கூடிய நபர்கள் கூட உங்கள் பேச்சை கேட்பார்கள். இதுநாள் வரை இழுபறியாக இருந்த பல சொத்து விஷயங்கள் குறித்த முக்கிய தகவல் உங்களுக்கு வந்தடையலாம்.

கடக ராசி நேயர்களே..!

உங்களுடைய நட்பால் பல நல்ல காரியங்கள் இன்று நடைபெறும். நீங்கள் நினைத்ததை உடனே செய்து முடிக்க ஆயத்தமாக செயல்படுவீர்கள். உங்களுக்கு பிடித்த வேலைகளில் அக்கறை காட்டுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களுடைய எதிரிகளை இதுவும் தூளாக்கும் நாள் இது. எந்த காரியத்தை எடுத்தாலும் மிக எளிதாக முடிப்பீர்கள். பழைய கடனை விரைவில் முடித்துக் கொள்ள பல திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

நினைத்த வேலையை எளிதில் முடிக்கும் நாள் இது. குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை காண்பிப்பீர்கள். பாதியில் நின்ற பல பணிகளை என்று தொடருவீர்கள். உங்களது வேலைகளில் மாற்றம் ஏற்படலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

உங்களது உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து தருவார்கள். வாகன பழுதுகளை நீக்கி அதனை சரிசெய்யும் செயலில் ஈடுபடுவீர்கள். நல்ல தகவல் வந்து சேரும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

உங்களது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். புதிய பணியாளர்களை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

தன வரவு தாராளமாக இருக்கும். அரசு வகையில் சில சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.புதிய சிலர் அறிமுகமாவார்கள். அவர்கள் மூலம் சில உதவிகள் உங்களுக்கு உண்டாக நேரிடலாம். 

மகர ராசி நேயர்களே..!

உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்ட காரியம் சில நாட்களாக நடைபெறாவிட்டாலும் எதிர்பாராத காரியம் ஒன்று இன்று உங்களுக்கு நிறைவேறும்.

கும்ப ராசி நேயர்களே...!

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள் இது. வீடு மாற்றம் பற்றி சிந்தனை பிறக்கும். பொது நலத்தில் அதிக ஆர்வம் காண்பீர்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது.

மீனராசி நேயர்களே...!

விரும்பியதை விரும்பிய காரியத்தை உடனடியாக முடிக்கும் நாள் இது. வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சில முக்கிய நபருடன் பேசுவதில் உங்களுக்கு லாபகரமாக புதிய திட்டம் மனதில் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.