மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்...!

மேஷ ராசி நேயர்களே..! 

உத்யோகத்தில் உங்களுடைய புது முயற்சி வெற்றிபெறும். நண்பர்களால் நல்ல தகவலை கேட்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய நாள் இது. வாகன பழுது செலவுகளால் கையிலிருந்து பணத்தை செலவழிக்க நேரிடலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

வருமான பற்றாக்குறை நீங்கும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை வந்து சேரும். வளர்ச்சி பாதைக்கு சில முக்கியத் திட்டங்களை தீட்டுவீர்கள். சில முக்கியமான பொருட்களை வாங்க ஆயத்தமாவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

போட்டிகளுக்கு மத்தியில் முன்னேறக்கூடிய நாள் இது. ஆரோக்கியம் சீராக வைத்துக்கொள்வது நல்லது. பிரபலமானவர்களை சந்தித்து ஆறுதல் பெறுவீர்கள். உங்களுக்கு கிடைக்கும் பழைய கடன் பிரச்சினைகள் சாமர்த்தியமாக சமாளிக்கக்கூடிய நாள் இது. 

கடக ராசி நேயர்களே ..! 

சந்தோஷம் அதிகரிக்கும். தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெற அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவீர்கள்.  வெளிவட்டாரப் பழக்கம் உங்களுக்கு அதிகரிக்கும். வீட்டை விரிவு செய்யவும் பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு இனிமையான நாள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுக்கு இன்று புதிய வழி பிறக்கும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று பணம் செலவழிக்க நேரிடலாம். மகிழ்ச்சிகரமான நாள் இது