மேஷ ராசி நேயர்களே..!

உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரித்து காணப்படும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மரியாதை உயரும். நண்பர்கள் உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை மகிழ்விப்பார்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

எதிலும் உங்கள் கை ஓங்கி இருக்கும். உங்கள் வார்த்தைக்கு அதிக மரியாதை கூடும். வாகனத்தை சீர் செய்து கொள்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

மிதுன ராசி நேயர்களே...!

அனாவசியமாக யாருக்காகவும் எந்த உதவியும் செய்து விடாதீர்கள். சொத்து வாங்குவது விற்பது குறித்து திட்டமிடுவீர்கள். பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம்.

கடக ராசி நேயர்களே...!

புது வாகனம் வாங்க கூடிய நேரம் வருகிறது. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

சிம்மராசி நேயர்களே...! 

எதிலும் எளிதாக வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலமும் உயர்ந்து காணப்படும். அரசியலில் செல்வாக்கு கூடும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 

கன்னி ராசி நேயர்களே...!

ஆசிரியர்களின் கனிவான பேச்சால் ஆறுதலாக இருப்பீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு மரியாதை ஏற்படும். மனைவி வழியில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும்.